Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்' என்ற ஆளுனரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு விமர்சனம்!

‘தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்' என்ற ஆளுனரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு விமர்சனம்!
, வியாழன், 5 ஜனவரி 2023 (18:32 IST)
ஆளுனர் ஆர்.என்,ரவியின் பேச்சுக்கு திமுக எம்பி டி.ஆர். பாலு விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு   தமிழ்நாடு ஆளுனராக ஆர்என்.ரவி  பதவியேற்றார். அவ்வப்போது, அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்களில்  கலந்துகொண்டு அவர் பேசும்போது, அரசியல் பேசிவருவதாகவும், வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகவும்,  மத ரீதியான கருத்துகள் கூறிவருவதாகவும்  அவர் மீது எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி  ‘’மாநிலத்தின் பெயரரான தமிழ்நாட்டை ‘தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்' என தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்திற்கு அரசியல் கட்சியினர், அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியினான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக எம்பியும் , அக்கட்சியின் பொருளாளருமான  டி.ஆர்.பாலு கூறியுள்ளதாவது: தமிழ்நாடு, தமிழன், திராவிடம் என்பவை ஆளுனர் ரவிக்கு கசப்பாக இருக்கின்றன. திராவிடக் கட்சிகள் தான் பிரிவினையை வளர்த்தது எனக் கூறுகிறார். அவர். தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் எனப் பிரித்தது இந்த திராவிடமல்ல.; இவருக்கு பாஜக தலைவராகும் ஆசையிருந்தால், ஆளுனர் பதவியை விட்டு விட்டு இதுபோல் அபத்தமாக பேசட்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரொனா தாக்கிய ஆண்களுக்கு விந்தணு பாதிப்பு - எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வில் தகவல்