Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவுதான்! – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

Webdunia
வியாழன், 7 மே 2020 (12:18 IST)
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் “இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. சென்னையின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. களத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். விரைவில் நல்ல சேதி வரும். கொரோனா குறித்து தேவையின்று பயப்பட வேண்டாம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments