Publish Date: Tue, 23 Jun 2020 (11:38 IST)
Updated Date: Tue, 23 Jun 2020 (11:41 IST)
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது..
அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,484 பேரும், தண்டையார் பேட்டையில் 5,227 பேரும், தேனாம்பேட்டையில் 5,110 பேரும், கோடம்பாக்கத்தில் 4,649 பேரும், அண்ணா நகரில் 4,585 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பல மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் ஆயிரத்தை நெருங்கி வருகின்றன.