Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூடி வாழும் மக்கள்; சென்னை கொரோனா பரவலுக்கு இதுதான் காரணமா?

Advertiesment
கூடி வாழும் மக்கள்; சென்னை கொரோனா பரவலுக்கு இதுதான் காரணமா?
, வியாழன், 14 மே 2020 (10:47 IST)
சென்னையில் கொரோனா அதிகரிக்க மக்கள் நெருக்கமே காரணம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் நேற்று வெளியான தகவலின்படி தமிழகத்தில் 509 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 509 பேர்களில் சென்னையில் மட்டும் 380 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5262 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து முதல்வர் பேட்டியளித்த போது அவர் கூறியதாவது, . சென்னையில் நெருக்கமான குடிசைகளில் 26 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். எனவே, மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 30 வரை ரயில்சேவை தடை: முன்பதிவுகளும் ரத்து!