சுவாதி கொலையில் சம்பந்தப்பட்ட ராம்குமாரின் கைதுபற்றி சென்னை மாநகர ஆணையர் டி.கே.ராஜேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது “கடந்த மாதம் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக சென்னை போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தோம்.
இந்த விசாரனையில் பொதுமக்களும், சுவாதியின் குடும்பத்தினரும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வந்தனர். மேலும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தொலைபேசி மூலம் ஏராளமான தகவல்களை கூறிவந்தனர்.
அந்த தகவல்களின் அடிப்படையில் நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் வசிக்கும் ராம்குமார் என்பவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே நேற்று இரவு 11 மணியளவில், திருநெல்வேலி போலீசார் ராம்குமாரின் வீட்டிற்கு சென்றனர். போலீசார் தன்னை கைது செய்வதை அறிந்த ராம்குமார் பிளேடால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டார். அதன்பின் அவரை போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவரின் ஆலோசனைப்படி ராம்குமார் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்படுவார்.
ராம்குமர் சென்னை சூளைமேடு பகுதியில் கடந்த 3 மாதங்களாக தங்கி வேலை செய்து வந்துள்ளார். சுவாதியிடம் அவர் பழக முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அது முடியவில்லை என்ற கோபத்தில் அவர் இந்த கொலையை செய்திருக்கலாம். விசாரனைக்கு பிறகே உண்மைகள் தெரியவரும். அவருக்கு எதிரான ஆதாரங்களை நிதிமன்றத்தில் சமர்பிப்போம்”என்று கூறினார்.
மேலும், ராம்குமார் எப்போது சென்னைக்கு அழைத்து வரப்படுவார்? அவரின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? கொலையின் நோக்கம் என்ன? ஒருதலைக்காதல் காரணமாக கொலை நடந்ததா? அவர்தான் குற்றவாளி என்பதற்கு முக்கியமான ஆதரங்கள் என்ன? என்ற கேள்விகளுக்கு அவர் பதில் கூறவில்லை.
பெரும்பாலன கேள்விகளுக்கு விசாரனைக்கு பிறகே தெரியவரும். அதற்கு அனுமதியுங்கள். பின்னால் கூறுகிறோம் என்றே பதிலளித்தார்.