சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதியை படுகொலை செய்த குற்றவாளி ராம்குமாரை காவல் துறையினர் இன்று அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் அவரது வீட்டில் கைது செய்தனர்.
இந்த குற்றவாளி கடந்த மூன்று மாதமாக சென்னை சூளைமேட்டில் ஸ்வாதியின் வீட்டருகே உள்ள A.S.மேன்சனில் தங்கியிருந்துள்ளார். இவர் சுவாதியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அதனை சுவாதி ஏற்க மறுத்ததாலும் அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை செய்து விட்டு தலைமறைவான ராம்குமாரை கண்டுபிடிப்பதில் காவல் துறை ஈடுபட்டது. இந்நிலையில் சூளைமேடு பகுதியில் காவல் துறையினர் வீடு வீடாக சென்று குற்றவாளியின் புகைப்படத்தை காட்டி விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில் A.S.மேன்சனின் காவலாளி கொடுத்து தகவலை அடுத்து காவல் துறை அங்கு விசாரணை மேற்கொண்டு குற்றவாளி ராம்குமார் என கண்டுபிடித்து. விடுதியில் இருந்து அவனது விலாசம் உட்பட தகவல்களை பெற்று அவனது சொந்த ஊருக்கு சென்று அவனை கைது செய்தது.
காவல் துறை அந்த மேன்சனில் ராம்குமார் தங்கி இருந்த அறையில் சோதனை செய்ததில் கொலை செய்தபோது அவர் அணிந்திருந்த இரத்த கறை படிந்த சட்டையை கைப்பற்றினர். மேலும் பல பொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ராம்குமார் தங்கியிருந்த A.S.மேன்சனுக்கு காவல் துறை சீல் வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றனர். ராம்குமாருடன் அந்த மேன்சனில் தங்கியிருந்த 50 வயதுள்ள ஒருவரும் சுவாதி கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து தலைமறைவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.