Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட கல்லூரி மாணவி ரூ.40 ஆயிரத்தை இழந்த சோகம்!

பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட கல்லூரி மாணவி ரூ.40 ஆயிரத்தை இழந்த சோகம்!
, வெள்ளி, 5 ஜூலை 2019 (08:13 IST)
ஒரே ஒரு பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது
 
சென்னை வடபழனியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஆன்லைனில் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார்.இதற்காக அவர் ஆன்லைனில் ரூ.76 செலுத்தியுள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த நிறுவனம் அவரது ஆர்டரை கேன்சல் செய்துவிட்டது. ஆனால் ரூ.76 திரும்ப தனது வங்கிக்கணக்கு வரவில்லை.
 
இதனால் அந்த கல்லூரி மாணவி அந்நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை கூகுளில் கண்டுபிடித்து அந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டார். அப்போது எதிர்முனையில் இருந்த நபர் ரூ.76 என்பது சிறிய தொகையாக இருப்பதால் அனுப்ப முடியாது என்றும் ரூ.5000 அனுப்பினால் மொத்தமாக ரூ.5076 அனுப்புவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து ரூ.5000 ஆன்லைன் மூலம் அந்த நபர் கூறிய வங்கிக்கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனாலும் கல்லூரி மாணவிக்கு தனது வங்கிக்கணக்கில் இருந்து பணம் வரவில்லை. இதனால் மீண்டும் அதே எண்ணுடன் தொடர்பு கொள்ள, தான் ஒரு ஓடிபி அனுப்புவதாகவும் அந்த ஓடிபியை கூறினால் உடனே பணம் வர ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து தனது மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணையும் கல்லூரி மாணவி கூறியுள்ளார். 
 
இருப்பினும் பணம் வராததால் மீண்டும் மீண்டும் வந்த ஓடிபியை அந்த நபரிடம் மாணவி கூறியுள்ளார். இதேபோல் எட்டுமுறை அவர் ஓடிபியை கூற ஒவ்வொரு முறையும் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.5000 எடுக்கப்பட்டு மொத்தம் ரூ.40 ஆயிரம் காலியாகியுள்ளது. அதன்பின்னர் தான் அந்த எண் போலியான கஸ்டமர் கேர் எண் என்பது கல்லூரி மாணவிக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் வடபழனி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். 
 
கூகுளில் இருக்கும் போலியான கஸ்டர்கேர் எண்ணை பயன்படுத்த கூடாது என்றும், நமது மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை யாரிடமும் பகிரக்கூடாது என்பதும் இந்த சம்பவத்தின் மூலம் மற்றவர்கள் கற்று கொள்ள வேண்டிய ஒரு பாடம் ஆகும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா மன்மோகன்சிங்?