Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகர பேருந்துகள் திருச்சி வரை இயக்கம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (18:17 IST)
சென்னை மாநகர பேருந்துகள் திருச்சி வரை இயக்கம்
விழுப்புரம், திண்டிவனம், திருச்சி வரை சென்னை மாநகர பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் ஆம்னி பேருந்துகளின் இயக்கம் குறைவாக இருப்பதால் சென்னை பேருந்துகள் கூடுதல் தொலைவு இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது.
 
கொரோனாவை கட்டுப்படுத்த மிக முக்கியம் கூட்டம் கூடக்கூடாது என்பதுதான். அதற்காகத்தான் தடை உத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சொந்த ஊருக்கு செல்ல ஒருவரை ஒருவர் முண்டியடித்து செல்வது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments