சென்னையை சேர்ந்த பெண் தொழிலதிபர் மற்றும் அவரது தந்தை தொடர்பான 1000 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை அபிராமபுரம் பகுதியில் சேமியர்ஸ் சாலையில் வசித்து வரும் ஆண்டாள் என்பவரும் அவருடைய தந்தையும் தொழிலதிபராக உள்ளனர். இந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஆண்டாளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது ஆண்டாள் மற்றும் அவரது தந்தைக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள், டிஜிட்டல் சேவைகள், அசையா சொத்துக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ரூ.912 கோடி மதிப்புள்ள பிக்சட் டெபாசிட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான முதலீடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.