இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு ஒரு ஆறுதலாக சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடர் அமைந்திருக்கும். வரிசையான டெஸ்ட் தொடர் தோல்விகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்த அவருக்கு இந்திய அணி இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கும்.
டி 20 தொடரில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சொதப்பி வருகிறது. அதற்குக் காரணம் அணியில் இருக்கும் மூத்த வீரர்கள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் ரோஹித் மற்றும் கம்பீருக்கும் இடையில் கூட கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கம்பீர். கோலி மற்றும் ரோஹித்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதில் “ கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் ஜாம்ப்வான்கள். அவர்கள் தங்கள் திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார்கள்” எனக் கூறியுள்ளார்.