சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் முடிவடையும் நிலையில் இதுவரை 12 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆசியாவில் மிகப்பெரும் புத்தக திருவிழாக்களில் ஒன்றான சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த பிப்ரவரி 16ம் தேதி தொடங்கியது. ஜனவரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு பின் தொடங்கப்பட்டது.
500க்கும் மேற்பட்ட ஸ்டாலிகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் தினம்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் இன்றுடன் புத்தக கண்காட்சி முடிவடைய உள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் உள்ளது. இந்நிலையில் இதுவரை 12 லட்சம் பேர் புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளதாக பபாசி தெரிவித்துள்ளது.