Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகரிக்கவில்லை, இறப்பு விகிதம் குறைவு: கொரோனா குறித்த பாசிட்டிவ் தகவல்

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (20:19 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் சென்னையிலும் அதிகரித்து வருவதாக கூறப்பட்டாலும் உண்மையில் சென்னையில் அதிகரிக்கவில்லை என்றுதான் மருத்துவர்கள் கூறி வருகின்றனர் 
 
சென்னையில் ஆரம்பத்தில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இதை வைத்துப் பார்த்தால் இந்நேரம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தினமும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் சென்னையில் 1500 முதல் 2000 மட்டுமே பாதிப்பு ஏற்படுவதால் சென்னையில் பாதிப்பு பெரியதாக இல்லை என்றும் மருத்துவர்கள் கூறி வருகிறார். இன்றும் கூட சென்னையில் 1834 பேர்கள்தான் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிசோதனையை அதிகரித்தால் இன்னும் அதிக அளவு கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்க படுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை பார்க்கும்போது பரிசோதனையை அதிகரித்தாலும் கொரோனா நோயாளிகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறாது.
 
ஏனெனில் தமிழகத்தில் தற்போது வரை தினமும் 50-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பலியாகி வருகின்றனர். பரிசோதிக்கப்படாத கொரோனா நோயாளிகள் ஒருவேளை இருந்தால் இந்நேரம் பலி எண்ணிக்கை அமெரிக்கா ரஷ்யா பிரேசில் போல் அதிகமாக இருக்கும். ஆனால் தமிழகத்தை பொருத்தவரை பலி எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.
 
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் குணமாகி வரும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதும் பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னை மற்றும் தமிழ்நாடு விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு விடும் என்றே நம்பப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments