சென்னையில் மரம் விழுந்து ஒருவர் பலி!
நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இந்த மழையால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளது என்பதும் ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்து சேதங்களை உண்டாக்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
அதுமட்டுமின்றி பேனர்கள், கட்-அவுட்டுக்கள் ஆங்காங்கே கீழே விழுந்து கிடந்ததை அடுத்து அனைத்து பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுக்கள் உடனடியாக அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது
இந்த நிலையில் ஏற்கனவே மயிலாப்பூர் கச்சேரி சாலையில் மரம் ஒன்று சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் கீழே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி திருவல்லிக்கேணியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது இதில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த சூறைக்காற்று காரணமாக சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் பெசண்ட் சாலையில் மரம் விழுந்து விழுந்ததாகவும் அப்போது அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த 50 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவர் யார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து ஒருவர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது