Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க முடிவு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க முடிவு!
, செவ்வாய், 28 நவம்பர் 2023 (09:58 IST)
தொடர்ந்து நீர்மட்டம் உயர்வதன் எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200  கன அடி நீர் திறக்க முடிவு.


தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயரம் 22.29 அடியும், மொத்த கொள்ளளவு 3195 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 452 கன அடியும், சென்னை குடிநீர் மற்றும் உபரி நீர் என 163 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது ஏரி 23 அடியை நெருங்குவதால் இன்று காலை 10 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் கூடுதலாக 175 கன அடி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 25 கன அடி உபரி நீர் சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது 200 கன அடியாக உயர்த்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித அறிவிப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகைக்கடையில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி! – மதுரையில் பரபரப்பு!