Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொழிலாளிகளிடம் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது – ஹெச்.ராஜா

Advertiesment
தொழிலாளிகளிடம் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது – ஹெச்.ராஜா
, திங்கள், 4 மே 2020 (20:36 IST)
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. திடீரென வெளியான அறிவிப்பால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இரண்டு கட்ட ஊரடங்குகளாக பணிபுரியும் இடத்திலேயே சிக்கி கொண்டிருந்த ஊழியர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால் ரயில்களை பாயிண்ட் டூ பாயிண்டாக இயக்கவும், முன்பதிவு முறையை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக தேசிய செயலர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கேரள மற்றும் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்களிடம் அம்மாநில அரசு சிறப்பு ரயில்களில் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேலும்,ரயில்வே அமைச்சகம் பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி நிதியளிக்கிறது. ஆனால் ஏழை தொழிலாளர்களுக்கு இலவச சிறப்பு ரயில் சேவை அளிக்க முடியாதா? என காக்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  கேள்வி எழுப்பியுள்ளார்.

ரயில்வே அமைச்சகம் காங்கிரஸின் பேச்சை கேட்கக்கூடாது என்றே செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில் கட்டணங்களை காங்கிரஸ் செலுத்தும் எனவும் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடியை வழங்கபடும் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை ! - ஆவின் நிர்வாகம்