சென்னையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடந்த நிலையில், கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக மெட்ரோவில் டிக்கெட் எடுக்காமல் பொதுமக்கள் பயணம் செய்ததாகவும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
விமான சாகச நிகழ்ச்சியை கண்டு கழித்துவிட்டு வீட்டிற்கு செல்ல திரும்பிய பொதுமக்கள், மெட்ரோவை அதிகம் பயன்படுத்திய நிலையில், மெட்ரோ நிலையங்களில் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.
டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசை இருந்ததாகவும், ஸ்கேனிங் மிஷின் வேலை செய்யவில்லை என்பதால் பல பொதுமக்கள் டிக்கெட் எடுக்காமல் உள்ளே செல்ல முயன்றதாகவும், அதிகாரிகளும் அதை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
டிக்கெட் எடுக்காமல் செல்லும் பொதுமக்களை தடுத்து நிறுத்த வேண்டாம் என்று வாய்மொழியாக உத்தரவிடப்பட்டதாகவும், டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தால் அதிக கூட்டம் காரணமாக அசம்பாவிதம் நடந்திருக்கும் என்பதால் தான் அதிகாரிகள் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்ததாகவும் புறப்படுகிறது.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோவில் கூட்டம் குறைவாக இருக்கும் நிலையில், நேற்று விமான சாகச நிகழ்ச்சி காரணமாக மெட்ரோவில் 4 லட்சம் பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.