Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்திரசேகரராவுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்: காங்கிரஸ் குஷி!

Advertiesment
சந்திரசேகரராவுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்: காங்கிரஸ் குஷி!
, திங்கள், 13 மே 2019 (20:45 IST)
இன்று நடைபெற்ற சந்திரசேகரராவ், ஸ்டாலின் சந்திப்பு தமிழக அரசியலை மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல்காந்திதான் பிரதமர் என முதல்முதலில் முழங்கிய மு.க.,ஸ்டாலினே மூன்றாவது அணி அமைக்கும் சந்திரசேகராவுடன் பேச்சுவார்த்தையா என காங்கிரஸ் கூட்டணி அதிர்ச்சி அடைந்தது
 
ஆனால் ஸ்டாலின், சந்திரசேகரராவ் சந்திப்பில் உண்மையில் நடந்தோ வேறு. பாஜக, காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளும், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் ,மூன்றாவது அணி ஆட்சி அமைப்பது குறித்து மு.க.ஸ்டாலினிடம் தனது விரிவான திட்டத்தை சந்திரசேகரராவ் விவரிக்க, அதனை பொறுமையுடன் கேட்ட மு.க.ஸ்டாலின், இந்த திட்டம் இப்போதைக்கு இருக்கட்டும், நான் தான் முதலில் ராகுல்காந்தியை பிரதமர் என அறிவித்தேன். அதனால் இப்போதைக்கு அதில் இருந்து பின்வாங்க முடியாது. முடிந்தால் நீங்களும் காங்கிரஸ் கூட்டணியை ஆதரியுங்கள்' என்று கூறினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரராவ், செய்தியாளர்களை கூட சந்திக்காமல் அதிருப்தியுடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
 
மு.க.ஸ்டாலின் - சந்திரசேகரராவ் சந்திப்பு குறித்து முதலில் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், பின்னர் இந்த தகவலை கேள்விப்பட்டு குஷியாகிவிட்டதாம். ஆனால் சந்திரபாபு நாயுடு இருக்கும் கூட்டணியில் சந்திரசேகரராவ் இருக்க மாட்டார் என்பதால் அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெருநாய்க்குட்டியை காப்பாற்றிய பெண் 'ரேபிஸ்' தொற்றால் மரணம்