Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்திரசேகர ராவ் சந்திப்பு மரியாதை நிமித்தமானது : ஸ்டாலின் அறிக்கை

Advertiesment
Chandrasekhara Raos
, திங்கள், 13 மே 2019 (18:58 IST)
உலகில் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் நம் தேசத்தில் நடைபெற்று வருகிறது. ஆறு  கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளன. இன்னும் ஒரு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னை  ஆழ்வார் பேட்டையில் உள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின் இல்லத்தில்  இன்று, தெலங்கானா முதல்வர் மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திர சேகர ராவ் சந்தித்து பேசினார்.
 
இன்று காலை முதலே இதுகுறித்து  அரசியல் விமர்சகர்கள், ஊடகங்கள் பல்வேறு வியூகங்களை எழுப்பிவந்தனர். 
 
அதில் தேர்தல் முடிவுக்குப் பின்னர்   தேசிய அரசியலில் மூன்றாவது அணி அமைப்பதற்காகத்தான் சந்திரசேகர ராவ் பல மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசிவருதாகத தகவல்கள் வெளியாகின.
 
இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் சந்தித்த சந்திரசேகர ராவ்  சுமார் ஒரு மணிநேரம் அவருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் முக ஸ்டாலின் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்  ’சந்திரசேகர ராவை சந்தித்தது மரியாதை நிமித்தமானது  என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவின் நிறத்தை மாற்ற சந்திரசேகரராவ் வந்துள்ளார்: தமிழிசை