Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா மாவட்டங்களில் சூப்பர் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (09:17 IST)
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை வெயில் தாக்கம் இருக்கும் என்றும், சென்னை, புதுச்சேரியில் சில பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments