தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (15:36 IST)
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகத்தில்  நிலவுகின்ற வளிமண்ட கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக  அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

வடதமிழகத்தில் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியினால், இன்று  வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்  ஒரு சில இடங்களிலும்,  தென் தமிழகத்தில்  ஒரு சில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும்,    நாளை முதல் வரும் 28 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளாதாக தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments