Publish Date: Wed, 23 Nov 2022 (16:50 IST)
Updated Date: Wed, 23 Nov 2022 (16:52 IST)
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஏற்கனவே இன்று காலை சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது