23 மாவட்டங்களில் மதியம் முதல் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth K
வியாழன், 6 நவம்பர் 2025 (12:49 IST)

வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இன்று 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சியால் தமிழக மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தீபாவளிக்கு பிறகு சற்று இடைவெளி விட்ட மழை தற்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில் இன்று 23 மாவட்டங்களில் மதியம் முதலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், சேலம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, தென்காசி, திருநெல்வேலி கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

 

திருவள்ளூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக - தவெக இடையேதான் போட்டி! அதிமுகலாம் ரேஸ்ல இல்ல! - விஜய் பக்கம் சாயும் டிடிவி தினகரன்!

ஆசிம் முனீர் ஒரு மனநலமில்லாதவர்: இம்ரான்கான் திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

மகளிர் உரிமை தொகை கொடுப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கும்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!

AI டெக்னாலஜிக்கு முழுக்க முழுக்க மாறப்போகும் IBM.. ஆயிரக்கணக்கோர் வேலைநீக்கம்?

இது பாகிஸ்தான் அல்ல, பீகார்.. புர்கா அணிந்து ஓட்டு போட பெண்கள் குறித்து மத்திய அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments