Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னைக்கு இந்த 3 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!? – வானிலை ஆய்வு மையம் ஹேப்பி அப்டேட்!

Prasanth Karthick
ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (09:04 IST)
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்று 3 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாகவே பல மாவட்டங்களிலும் வெயில் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ள நிலையில் மக்கள் மதிய வேளைகளில் வெளியே செல்லவே கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையிலும் சில பகுதிகளில் கோடை மழை காரணமாக அவ்வபோது மிதமான மழை பெய்வது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ: திமுக கவுன்சிலர்களே ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவா? அப்செட்டில் துரைமுருகன்..!

அந்த வகையில் இன்றும் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வறண்ட வானிலையே நிலவும் என்றும், சில இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்பூர் வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு: பெரும் பரபரப்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments