Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

Siva
ஞாயிறு, 16 ஜூன் 2024 (11:32 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் மின்சார ரயில் வரும் ஜூன் 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
 
சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால்  ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
திருவள்ளூர் பணிமனையில் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் அதிகாலை இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னை சென்ட்ரலில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக திருவள்ளூரில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் ஜூன் 19, 20 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments