பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடையிலான உரையாடலை தொடர்ந்து, வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு தமிழகத்திற்கு விரைவில் வர இருப்பதாக கூறப்படுகிறது.
வங்கக்கடலில் உருவான புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதை உடனடியாக ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகத்திற்கு உடனடியாக வர வேண்டும் என்றும் இடைக்கால நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வெள்ள பாதிப்புகள் குறித்து அறிந்துகொண்டதாகவும், நிவாரண உதவி வழங்க மத்திய அரசை முதல்வர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, தமிழகத்தின் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அனுப்புவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. வேளாண் துறை, உள்துறை, பாதுகாப்பு துறை ஆகியவை அடங்கிய குழுக்களை அனுப்ப பரிசீலனை நடந்து வருகிறது. அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் இந்த குழு தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.