Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

Mahendran

, திங்கள், 2 டிசம்பர் 2024 (15:13 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ₹5000 வழங்கப்படும் என புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி புதுவையும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதுவை அருகே தான் புயல் கரையை கடந்ததால், அங்கு பெய்த கன மழையால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்புகளுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். அதன்படி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், கன மழைக்கு 4 பேர் உயிரிழந்ததை எடுத்துக்கொண்டு, அந்த நால்வரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கனமழையால் ஆடு, மாடுகளை இழந்தவர்களுக்கு ஒரு ஆடுக்கு ரூ.20,000, ஒரு மாடுக்கு ரூ.40,000, படகு சேதமடைந்திருந்தால், ஒரு படகுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்றும்,  மேலும், வீடுகள் முழுமையாக சேதமடைந்து இருந்தால் ரூ.20,000, விவசாய நிலங்கள் சேதமடைந்தால் ஹெக்டேருக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!