Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்..!

Mahendran
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (18:19 IST)
பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில்  மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஷோபா கரந்தலஜே
சென்னை உயர்நீதிமன்றத்தில், மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அந்த ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, தான் கொண்டு வந்த பையை அங்கேயே வைத்துவிட்டு சென்றதாகவும்,  அந்த பைக்கில் இருந்த  வெடிகுண்டுகள் வெடித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர் தான் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்துவிட்டு சென்றுவிட்டார் என்று மத்திய இணை அமைச்சர்  ஷோபா கரந்தலஜே பேசியது  சர்ச்சையான நிலையில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தான் தற்போது மத்திய அமைசர் ஷோபா மன்னிப்பு கோரியுள்ளார்,.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிபா வைரஸ் பாதித்து 24 வயது வாலிபர் உயிரிழப்பு: கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம்..!

“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்”.! மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!!

மீன்வள பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.. என்ன காரணம்?

தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க தமிழக அரசு திட்டம்! விரிவான தகவல்..!

துணை முதல்வர் பதவி எப்போது? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments