Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள்.. காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Mahendran
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (18:13 IST)
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல் துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? என காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லை? இந்த வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா?  என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். 
 
இதற்கு பதிலளித்த காவல் துறை சென்னை பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும், குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன எனவும் தெரிவித்தனர்.
 
பெரும்பாக்கம், துரைப்பாக்கம் குடிசை மாற்றுவாரிய கட்டட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரிய வழக்கில் தான் நீதிபதிகள் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச்சரித்த எடப்பாடியார்! மீண்டும் வந்த ஆம்புலன்ஸ்! - ஆவேசமான அதிமுகவினர் செய்த செயல்!

துப்பாக்கிய குடுத்துட்டா நான் தளபதி ஆயிடுவேனா? - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

துணை முதல்வர் போலவே ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.. கர்நாடக அரசியலில் பரபரப்பு..!

முதலில் விண்வெளிக்கு போனது ஆம்ஸ்ட்ராங்க் இல்ல.. அனுமார் தான்! - பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு!

சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. தமிழிசை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments