வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க விமானங்கள் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சிக்கியுள்ள இந்திய மக்களை விமானங்கள் மூலம் இந்திய அரசு திரும்ப அழைத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்னமும் பல நாடுகளில் சிக்கி தவித்து வரும் தமிழர்களை மீட்க ஜூலை 20 முதல் ஆகஸ்டு 5 வரை 58 சிறப்பு விமானங்கள் உலக நாடுகள் முழுவதிற்கும் இயக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி உலக நாடுகளிலிருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் சிறப்பு விமானங்களின் விவரங்கள் சென்னைக்கு 41 விமானங்களும், திருச்சிக்கு 11 விமாங்களும், கோவைக்கு 4 விமானங்களும், மதுரைக்கு 2 விமானங்களும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.