Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குறைந்தது சிமெண்ட் விலை... மேலும் குறைய வாய்ப்பு!

குறைந்தது சிமெண்ட் விலை... மேலும் குறைய வாய்ப்பு!
, செவ்வாய், 22 ஜூன் 2021 (18:58 IST)
தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளதால் கட்டுமான துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 
கொரோனா ஊரடங்கு, பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் ரூ.370க்கு விற்று வந்த ஒரு மூட்டை சிமெண்ட் கிடுகிடுவென விலை உயர்ந்து ரூ.520க்கு விற்பனையாகி வந்தது. சிமெண்ட் விலையை தொடர்ந்து மேலும் சில கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்தது. மற்ற மாநிலங்களில் சிமெண்ட் விலை குறைவாக உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் விலை அதிகமாக உள்ளதாக புகார்கள் எழுந்தது.
 
இந்நிலையில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் 10, 8 M.M TMT கம்பி ஒரு டன் விலை 69,000-லிருந்து ரூ.68,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.55 குறைந்துள்ளதால் கட்டுமான துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ரூ.490க்கு விற்கப்பட்டு வந்த சிமெண்ட் தற்போது ரூ.460ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!