Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருமூர்த்தி வீட்டில் குண்டுவீச முயற்சி: சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸ்

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (08:22 IST)
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் நேற்று மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் செய்ய முயற்சித்தனர் என்று செய்தி வெளியானது தெரிந்ததே. இந்த செய்தி வெளியானதும் ஒரு சிலர் ரஜினி-பெரியார் பிரச்சனையை மறைப்பதற்காக இப்படி ஒரு புரளி கிளப்பி விடுவதாக கூறினார் 
 
இதனையடுத்து சற்று முன்னர் போலீசார் இதுகுறித்த சிசிடிவி கேமரா வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவில் 3 இருசக்கர வாகனங்களில் 6 பேர் குருமூர்த்தி வீட்டின் முன் இறங்கி வருவதும் அதில் ஒருவர் பெட்ரோல் குண்டை எடுத்து வீசுவதும் ஆனால் அந்த குண்டு வெடிக்காமல் இருந்ததும் அதன் பின்னர் போலீசார் வருவதை அறிந்ததும் 6 பேரும் அவசர அவசரமாக தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் கிளம்பி தப்பித்து ஓடுவதுமான காட்சிகள் உள்ளது.
 
இந்த சிசிடிவி வீடியோவில் இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர்களின் முகம் தெளிவாக தெரிவதால் விரைவில் அவர்களை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனையடுத்து குருமூர்த்தி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ஆக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments