Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திராவிடர் ரஜினிக்கு நன்றி - திமுக எம்பி டிவிட்!!

Advertiesment
திராவிடர் ரஜினிக்கு நன்றி - திமுக எம்பி டிவிட்!!
, வியாழன், 23 ஜனவரி 2020 (16:40 IST)
”திராவிடர் ரஜினிக்கு நன்றி" வைரலாகும் திமுக எம்.பி. டாக்டர். எஸ்.செந்தில்குமார் டிவிட். 
 
கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளியானது.     
 
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. கேள்விப்பட்டது பத்திரிகைகளில் வந்தைத்தான் கூறினேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார்.  
 
ரஜினியின் இந்த கருத்துக்கு விமர்சனங்களும் ஆதரவுகளும் கலவையாகவே கிடைத்து வருகின்றனர். இந்நிலையில், ”திராவிடர் ரஜினிக்கு நன்றி" என குறிப்பிட்டு, திமுக எம்.பி.யான டாக்டர். எஸ்.செந்தில்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 
 
அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது, தமிழகத்தில் பெரியாரை உயிர் துடிப்புடன் வைத்திருக்க உதவிய திராவிடர் ரஜினி  அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் கமல்நாத்தின் கழுத்தை பிடித்து தள்ளுவோம் - சீக்கிய அமைப்பு