Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொக்கரித்த தலைவியும் சுபவீக்களும் எங்கே? நடிகை கஸ்தூரி கேள்வி!

Advertiesment
கொக்கரித்த தலைவியும் சுபவீக்களும் எங்கே? நடிகை கஸ்தூரி கேள்வி!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (20:40 IST)
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த பள்ளியை மூட வேண்டும் என்றும் பத்மா சேஷாத்ரி பள்ளியை அரசுடமையாக்க வேண்டும் என்றும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் தெரிவித்து வந்தனர்.
 
இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளியைப் போலவே மேலும் சில பள்ளி ஆசிரியர்களும் அதே பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அந்த பள்ளிகளை மூட வேண்டும் என்றோ, அந்த பள்ளிகளுக்கு கண்டனம் தெரிவித்தோ ஒரு தலைவர் கூட அறிக்கை விடவில்லை, பொங்கவில்லை. இது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளதாவது:
 
செட்டிநாடு பள்ளி, மகரிஷி, இன்னும் பல சென்னை பள்ளிகளில்  தொடர்  pocso கைதுகள். துரிதமாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி. ஏன் இதை எந்த அமைச்சரும் பிரபலமும்  பாராட்டவில்லை, ஏன் எந்த மீடியாவும் பகிரங்கப்படுத்தவில்லை??
 
பத்ம சேஷாத்திரி பள்ளியை மூட வேண்டும் என்று கொக்கரித்த தலைவியும் சுபவீக்களும்  dravidian  stockகுகளும்  இப்போது கள்ள மௌனம் காப்பது ஏன்?   ஜாதி பாசமா  பண பேரமா இல்லை பயமா?  ஒருவேளை இதுதான் பகுத்தறிவா? என்று பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிபிஎஸ்இ தேர்வு ரத்தை அடுத்து, தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்த முக்கிய தகவல்!