Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிஞ்சா என்னை பிடி – போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா மணி

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (12:22 IST)
”நான் நெய்வேலியில் கஞ்சா விற்கிறேன். இதை தடுக்க நினைக்கும் போலீஸ் ஒருவரை கொலை செய்யப் போகிறேன். முடிஞ்சா என்னை பிடிங்க” என கஞ்சா வியாபாரி மணி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெங்களூரில் வசிப்பவர் மணி. இவர் மந்தாரக்குப்பத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வரும்போது கஞ்சாவையும் எடுத்து வந்து நண்பர்களுக்கு கொடுப்பது, வெளியில் விற்பது போன்ற சட்ட விரோத காரியங்களை செய்து வந்தார். எப்பொழுதாவது போலீஸில் மாட்டிக்கொண்டால் தான் வைத்திருக்கும் பிளேடை வைத்து உடலில் கீறி கொள்வார். அவர் உடலில் ரத்த காயங்களை பார்த்த போலீஸார் பயந்து திரும்ப வந்து விடுவார்களாம்.

இந்நிலையில் நெய்வேலி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரிப்பது, அதனால் இளைஞர்கள் பலர் வாழ்க்கை நாசமாவதையும் கருத்தில் கொண்டு போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர். அங்கு கஞ்சா விற்கும் நபர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கஞ்சா வியாபாரி பெங்களூர் மணி போலீஸுக்கு விட்டிருக்கும் சவால் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் “நான்தான் பெங்களூர் மணி பேசறேன். என் மீது செக்சன் 307 உள்பட 28 வழக்குகள் இருக்கிறது. நான் நெய்வேலியில் கஞ்சா விற்று வருகிறேன். அதை தடுக்க நினைக்கும் போலீஸ் ஒருவரை போட்டுத்தள்ள போகிறேன். என்னிடம் ஆதார் உள்ளிட்ட அனைத்து அடையாளங்களும் உள்ளன. முடிந்தால் போலீஸ் என்னை கைது செய்யட்டும்” என வீராப்பாய் பேசியுள்ளார்.

இதுகுறித்து கூறிய காவல்துறையினர் “கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மந்தாரகுப்பத்தில் நடந்த அடிதடி வழக்கில் பெங்களூர் மணி கைது செய்யப்பட்டார். அதற்கு முன் வெளியிட்ட பழைய வீடியோ இது. ஆனாலும் இதை பரப்பியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments