Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலன் முகத்தில் ஆசிட் வீசிய பெண்: டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

Advertiesment
National News
, திங்கள், 17 ஜூன் 2019 (11:48 IST)
டெல்லியில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் விகாஸ்பூரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், 24 வயது இளைஞர் ஒருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் ”என்னை திருமணம் செய்து கொள்” என அந்த இளைஞரை வற்புறுத்தியுள்ளார். அந்த இளைஞர் சில சாக்குபோக்குகளை சொல்லி காலம்கடத்தி வந்துள்ளார்.

அந்த பெண்ணின் தொல்லை தாங்காமல் அவருடனான காதலை முறித்து கொள்ள அந்த இளைஞர் திட்டமிட்டுள்ளார். இதை தெரிந்து கொண்ட இளம்பெண் அவரை சந்திக்க வேண்டுமென ஒரு இடத்திற்கு வர சொல்லியிருக்கிறார். இளைஞரும் வந்திருக்கிறார். வந்தவர் மீது திடீரென ஆசிட்டை ஊற்றியிருக்கிறாள் அந்த பெண். பிறகு போலீஸுக்கு பயந்து தனது உடலிலும் சிறிது ஆசிட்டை ஊற்றிக்கொண்டு சம்பவ இடத்திலேயே இருந்திருக்கிறார்.

சம்பவமறிந்த போலீஸார் உடனடியாக அங்கே சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆசிட் வீசிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிடுக்கு பிடி பிடித்த ஆக்டோபஸ்:திணறிய நீச்சல் வீரர்