Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.எஸ்.எஸ்-இல் இணைந்தாரா கிருஷ்ணசாமி? அதிர்ச்சி தகவல்

Advertiesment
Tamilnadu News
, திங்கள், 17 ஜூன் 2019 (13:41 IST)
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ்-இல் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருந்ததியர் இன மக்களுக்காக புதிய தமிழகம் கட்சியை தோற்றுவித்தவர் கிருஷ்ணசாமி. தென் மாவட்டங்களில் பிரபலமான கட்சியாக அதை வளர்த்தெடுக்கவும் செய்தார். தீவிரமான இந்துத்வா கொள்கைகளை கொண்டவர் கிருஷ்ணசாமி. தொடர்ந்து பல மேடைகளிலும், விவாதங்களிலும் அதை பற்றி பேசியும் வந்திருக்கிறார்.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியோடு இணைந்து தென்காசியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி தோல்வியை தழுவினார். இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன்னர் மஹாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு சென்று வந்துள்ளார் கிருஷ்ணசாமி. அங்கு ஆர்.எஸ்.எஸ் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கிருஷ்ணசாமி, அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ்-இல் இணைந்துவிட்டதாகவும், விரைவில் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் இணையப்போகிறார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரைவரும் மப்பு.. கண்டக்டரும் மப்பு – பயணிகள் உயிரில் அலட்சியம் !