Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் முழு பொறுப்பு: தமிழக அரசு பதில் மனு..!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் முழு பொறுப்பு: தமிழக அரசு பதில் மனு..!

Mahendran

, புதன், 31 ஜூலை 2024 (12:37 IST)
மத்திய அரசு இன்னும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என்றும், மத்திய அரசு தரப்பில் தாமதம் செய்யப்படுகிறது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த நடவடிக்கை மற்றும் முடிவை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்’ என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் முழு பொறுப்பு என்றும், இதில் தமிழ்நாடு அரசு தரப்பில் தனியாக எந்தவித முடிவுவோ அல்லது அறிவிப்போ எடுக்க முடியாது என்றும் அந்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே பீகார், ஆந்திரா உள்பட ஒரு சில மாநிலங்களில் மாநில அரசு சாதி வாரி கணக்கெடுப்பை எடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மட்டும் மத்திய அரசுதான் ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

பாமக தலைவர் அன்புமணி உள்பட சில அரசியல் கட்சி தலைவர்கள் மாநில அரசே  சாதி   வாரி கணக்கெடுப்பை எடுக்கலாம் என்று கூறிய போதிலும் தமிழ்நாடு அரசு மாநில அளவில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தும் பணியை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்.. மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு