வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தேவை என்று சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் போராட்டத்தின் முடிவில் முதல்வரை சந்தித்த அன்புமணி ராமதாசிடம் சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அதன் பின்னர் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்
இந்த நிலையில் தமிழகத்தில் ஜாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு செய்து உள்ளார்
மேலும் சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து புள்ளி விவரங்களை அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் ஆணையத்திற்கு தமிழ்க அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது