Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு... திமுகவினர் அதிர்ச்சி!!

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு... திமுகவினர் அதிர்ச்சி!!
, செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:14 IST)
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக அவதூறி பேசியதற்காக இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்னும் சில மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறவேண்டி, திமுக,அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி , முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதாவின் தோழியும் தினகரனின் உறவினருமான தற்போது சிறையிலுள்ள சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய  வகையில்பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ராஜலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பெண்களை இழிவாகப் பேசுதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அண்ணா திராவிடர் கழகத்தில் இளைஞரணி செயலாளர் ஜெயானந்த் திவாகரன் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைடு வாங்கி மின்கம்பத்தில் உரசிய பஸ்; மின்சாரம் தாக்கி பயணிகள் பலி! – தஞ்சாவூரில் சோகம்!