தினகரனுக்கு ஆதரவாக உள்ள நடிகர் செந்தில் மீது வழக்குப்பதிவு!
தினகரனுக்கு ஆதரவாக உள்ள நடிகர் செந்தில் மீது வழக்குப்பதிவு!
Publish Date: Wed, 06 Sep 2017 (13:07 IST)
Updated Date: Wed, 06 Sep 2017 (13:12 IST)
காமெடி நடிகர் செந்தில் தற்போது டிடிவி தினகரன் ஆதரவு அணியில் உள்ளார். இவர் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த திருச்சி எம்பி குமாரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது வழக்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் செந்தில் சென்னையில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டு வாசலில் ஊடகங்கள் மத்தியில் பேசும்போது திருச்சி எம்பி குமார் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்பி குமார், செந்தில் பேசிய அந்த வீடியோ விவரங்களை சேகரித்து போலீசில் புகார் அளித்துள்ளது.
டிடிவி தினகரனின் தூண்டுதலின் பேரில் தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியதாக அந்த புகாரில் எம்பி குமார் கூறியுள்ளார். இதனையடுத்து டிடிவி தினகரன் மீதும் செந்தில் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.