Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னுடைய மகள் தற்கொலை செய்யவில்லை; நடிகை பிரதியுஷாவின் தாய் பரபரப்பு தகவல்

Advertiesment
என்னுடைய மகள் தற்கொலை செய்யவில்லை; நடிகை பிரதியுஷாவின் தாய் பரபரப்பு தகவல்
, திங்கள், 30 அக்டோபர் 2017 (16:27 IST)
தமிழ் சினிமாவில் பிரதியுஷா. மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி, பிரபுவுடன் சூப்பர் குடும்பம் என சில படங்களில் நடித்திருந்தவர். தெலுங்கு சினிமா நடிகையான இவர் கடந்த 2002 ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டதாக  செய்திகள் வெளிவந்தன.

 
இந்த சம்பவத்தில் அவரது காதலன் சித்தார்த் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதியுஷாவின் அம்மா நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் பேட்டி ஒன்றில்,  என் மகள் விஷம்  குடித்து தற்கொலைசெய்யவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில்  விஷத்தை தடவி நாடகம் நடத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அதற்கான காயங்கள், நகக் கீரல்கள் அவளின் உடல்  முழுவதும் இருந்தது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிட்டு, குற்றவாளிகள்  விடுதலையாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதில் குற்றம் செய்தவர்களை தண்டிக்க ஆண்டவன் இருக்கிறான். எனது மகளின் இறப்பால் மகனும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளான். 15 வருடமாக நீதி கேட்டு நான் தனியாக போராடிக் கொண்டிருக்கிறேன் என பிரதியுஷாவின் அம்மா சரோஜினி கதறி அழுதவாறு கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'மெர்சல்' பேனர் விழுந்ததால் ஒரு குடும்பத்திற்கே காயம்