Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே.என்.நேரு தொகுதியில் தேர்தல் ரத்தா?

Advertiesment
கே.என்.நேரு தொகுதியில் தேர்தல் ரத்தா?
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:48 IST)
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கேஎன் நேரு மீது தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் அந்த தொகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
முக் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கேஎன் நேரு ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக தரப்பிலிருந்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்பட 5 தொகுதிகளில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கேஎன் நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ள
 
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் திடீரென திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலுக்குப் பிறகு 12 ஆம் வகுப்புத் பொதுத்தேர்வு குறித்து முடிவு!!!