Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

புளிய மரத்தில் கார் மோதி விபத்து - இரண்டு பேர் காயம்!

Advertiesment
car accident

J.Durai

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (12:48 IST)
திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள சரளை பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 49)
விஜயகுமார் (வயது 26) இருவரும் திண்டுக்கல்லில் இருந்து சரளைப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.
 
காரை சரளைப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் (வயது 27) ஓட்டி வந்துள்ளார். அப்போது மணக்காட்டூர் அருகே மேற்குபட்டி வழியாக வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் நிலை தடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில மோதியது.
 
இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. காரில் பயணம் செய்த பழனிச்சாமி என்பவருக்கு காலில் பலத்த காயமும், விஜயகுமாருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. 
 
சம்பவ இடத்திற்கு அந்த அவசர ஊர்தி மூலம் 
காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
 
ஓட்டுனர் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து நத்தம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருடப்பட்ட பசுமாடுகள் மினி வேனில் சந்தைக்கு கொண்டு வந்தபோது மீட்பு!