Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருத்தாசலத்தில் கேப்டன் விஜயகாந்த் செய்த சம்பவம்....வைரலாகும் பதிவு

Advertiesment
vijayakanth
, வியாழன், 28 டிசம்பர் 2023 (20:18 IST)
தேமுதிக கட்சியை தோற்றுவித்த பின்னர், அடுத்த நடந்த தேர்தலில் போட்டியிட்டு அக்கட்சி சார்பில் விஜயகாந்த் ஒருவர் தான் எம்.எல்.ஏவானார். அப்போது அவர் செய்த செயல் பற்றி ஒருவர் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தேமுதிக கட்சியை தோற்றுவித்த பின்னர், அடுத்த நடந்த தேர்தலில் போட்டியிட்டு அக்கட்சி சார்பில் விஜயகாந்த் ஒருவர் தான் எம்.எல்.ஏவானார்.

அப்போது அவர் செய்த செயல் பற்றி ஒருவர் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. அதில்,  ‘’எங்க ஊர் விருத்தாச்சலம் தான் முதன்முறையா எம்.எல்.ஏ ஆனார். அப்போ கம்யூட்டர் கிளாஸ் பத்தி எல்லாம் யோசிச்சுக் கூட பார்க்க முடியாத எங்களைப் போல எத்தனையோ மிடில் கிளாஸ் லேடீஸுக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு.

இது மட்டும் இல்லாம இலவச தையல் பயிற்சி வகுப்பும் இருந்துச்சு. சினிமால கேப்டன் அ ரொம்ப பிடிச்சாலும், எங்க ஊர் எம்.எல்.ஏ வா அவர பாத்து பேசினது இன்னும் அவர் மேல பாசமும் பிரமிப்பும் அதிககமாச்சு தங்கமான மனுஷன். மிஸ்யூ சார்’’ என்று குறிப்பிட்டு, அந்த கம்பியூட்டர் கிளாஸ் சான்றிதழையும் அவர் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த்-ன் இழப்பு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும்-இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர்