இன்று போகி கொண்டாடப்படும் நிலையில் ஏற்பட்ட பயங்கர புகை மூட்டத்தால் ரயில்கள் சென்னைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். சென்னையில் பரவலாக மக்கள் போகி கொண்டாடிய நிலையில் காலையிலேயே காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
அதிகபட்சமாக மணலில் பெருங்குடியில் 277 என்ற அளவில் காற்று மாசுபாடு தரக்குறியீடு உள்ளது. பல பகுதிகளிலும் நிலவி வரும் இந்த கடும் புகைமூட்டத்தால் விமானங்கள் சென்னைக்கு வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் சில சிக்னல் சரியாக தெரியாததால் தாமதமாக வருகின்றன. இதனால் ரயில் பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.