Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்லா சொத்தை ஆட்டையை போட்டால் நல்லா இருக்க முடியுமா? நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை!

J.Durai
செவ்வாய், 16 ஜனவரி 2024 (09:15 IST)
அய்யா லட்சம் லட்சம் கோடி போட்டு கோவில் கட்டுங்கள் யார் வழிபாட்டு உரிமையையும் யாம் மதிக்கிறோம்..எந்த நடிகன் படம் ஓடாமல் மோடியின் படம் தான் ஓடுகிறது.


 
1850 க்கு முன்ராமருக்கு கோயில் இந்தியாவில் இல்லை என முன்னால் ஜனாதிபதி ராதாகிருஸ்ணன் மகன் சர்வபள்ளி கோபால் வரலாற்று அறிஞர்.எழுது கிறார்.

லண்டனில் படித்தவர் பல அரசு பதவிகளில் இருந்தவர். 1528 இல் எப்படி இல்லாத கோவிலை இடித்திருக்க முடியும்? நான் வால்மீகி ராமாயணம். படித்தவன் வேடர்குலத்தை சேர்ந்தவழிப்பறி திருடனாக இருந்தவர் நாரதரை அம்பு எய்து வழிப்பறிக்கு முயன்றபோது நீ பாவம் செய்து உன் மனைவிக்கு கொண்டுபோய் கொடுப்பதில் அவர்களுக்கும் பிரதிபலன் பழியில் பங்குண்டு எனக் கூற வால்மீகி மனைவியிடம் சென்று இதைச் சொல்ல.

மனைவி அந்த பாவத்துல நாங்க பங்கு எடுக்க முடியாது நீ தப்பா சம்பாதிச்சு கொண்டாந்தா அந்த பாவம் உங்களுக்குத்தான். எனக் கூற மனந்திருந்திய வால்மீகி மகரிஷி ஆகி ராமாயணம் எழுதுகிறர். இந்துதர்மப்படியே இன்னொருவர் இடத்தை அபகரிப்பது குற்றம். சிவன் சொத்து குலநாசம் என்பார்கள்.

அல்லா சொத்தை ஆட்டையை போட்டால் நல்லா இருக்க முடியுமா? ரதயாத்திரை நடத்தி இல்லாத பொய் சொல்லி பல்லாயிருக் கணக்கான மக்களை கொன்றுகுவித்து மதவெறி மட்டுமே மூலதனம். 3000 ரூ. நிலக்கரிக்கு 30000 ரூ அதானிக்கு கொடுத்து வாங்கச்செய்து 25, லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்து எந்த வேலைவாய்ப்புமின்றி எல்லா பொதுத்துறையும் ஸ்வாகா செய்துவிட்டு, ஓட்டு மெசின் மூலம் ஆட்சியை பிடித்து நடத்துவதால். மக்களின் உரிமை, வாழ்வுரிமை எப்படி தெரியும் இவர்களுக்கு !! | இந்து சகோதரர்களே பார்த்துக்கொள்வார்கள்|!!

ஈஸ்வர் அல்லா தேரே நாம்.பஜ்மன் ப்யாரே... கிருஸ்ணா - கறீம். பஜ்மன் ப்யாரே... ராம். ரஹிம்.... விலைவாசி குறைய வேலைவாய்ப்பு பெருக நாடு முன்னேற நல்லது நடக்கட்டும்.

ஜெய் ஜெய் ராவணன்!!
இராவணன் இசை ஞானத் தமிழன் சிவபக்தன் இராவணனாக நடித்த நடிப்பு கூலித்தொழிலாளி
மன்சூரலிகானின் வாழ்த்துக்கள்.

புதிய கோயில் விழா சிறக்க!!!! எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்கட்டும்.
நன்றிகள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக ஆட்சியில் தான் அதிக ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்: ஆர்.எஸ்.பாரதி

மத்திய அரசை தாக்கி பேசுவது மட்டும் தான் அரசின் நடவடிக்கையா? சரத்குமார்

மத்திய அரசின் பிரச்சார் பாரதியின் புதிய ஓடிடி: 40 சேனல்களை காணலாம்..!

3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமானம் ரத்து: மத்திய அமைச்சர் உத்தரவு..!

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: அனைத்து நீதிமன்றங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments