Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் 7 ஸ்டார் ஓட்டல்.. முற்றிலும் சைவ உணவுகளை மட்டுமே பரிமாறும் முதல் 7 ஸ்டார் ஓட்டல்

Siva
செவ்வாய், 16 ஜனவரி 2024 (09:10 IST)
அயோத்தியில் முழு சைவ உணவு வகைகளை மட்டுமே பரிமாறும் இந்தியாவின் முதல் 7 நட்சத்திர ஹோட்டல் தொடங்கப்பட உள்ளது.
 
 அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து ஏராளமான பக்தர்கள் இனி தினமும் அந்த கோயிலுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முழுக்க முழுக்க சைவம் சாப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியாவில் முதல் முறையாக சைவ உணவுகளை மட்டுமே பரிமாறும் செவன்ஸ்டார் ஹோட்டல் ஒன்று அயோத்தியில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சைவத்தில் உள்ள அனைத்து வகைகளும் இங்கு கிடைக்கும் என்றும்  சைவ பிரியர்களுக்கு ஏற்ப இங்கு உணவு தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டல் என்றாலே அசைவம் தான் முக்கியத்துவமாக இருக்கும் என்ற நிலையில் இந்தியாவின் முதல் சைவ 7 ஸ்டார் ஹோட்டல் அயோத்தியில் திறக்கப்பட உள்ளதை அடுத்து அந்த ஹோட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்திக்கு வரும் விவிஐபிகள் இந்த ஓட்டலில் சாப்பிட வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments