Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் கோவில் கும்பாபிஷேகம்! இந்திய அரச வம்சாவளி கொரிய ராணிக்கு அழைப்பு!

ramar temple

Prasanth Karthick

, திங்கள், 15 ஜனவரி 2024 (11:42 IST)
ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரபு ராம் வம்சத்தை சேர்ந்த கொரிய ராணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



அயோத்தியில் 1000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 22 அன்று கோலாகலமாக கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இந்தியாவில் உள்ள பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 55 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள், தூதர்களுக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பிரபு ராம் வம்சத்தை சேர்ந்த கொரிய ராணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கொரிய அரசரை மணம் செய்து சென்ற சுரிரத்னா என்ற ராணியாரின் வம்ச தோன்றல் இவர்.

மேலும் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை என 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டூவல் AI கேமரா.. 200% சூப்பர் சவுண்ட் சிஸ்டம்! வெளியானது Infinix Smart 8! – முழு விவரங்கள்!