Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் முதுகில் ஆயிரம் அழுக்கு! – ஆவேசமான அதிமுக அமைச்சர்

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (12:15 IST)
திமுக நாளேட்டில் தன்னை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்துள்ளதற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சரியாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என திமுக வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ”உள்ளாட்சி தேர்தலை சீர்குலைக்க திமுக முயற்சிக்கிறது. மாநில தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் திமுக செயல்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னைப்பற்றியும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் முரசொலியில் எழுவதற்கு கண்டன் தெரிவித்துள்ள அமைச்சர் சி.வி.சண்முகம் ”ஸ்டாலின் காந்தியும் இல்லை, நான் புத்தனும் இல்லை. ஸ்டாலின் முதுகில் ஆயிரம் அழுக்கை சுமந்து கொண்டு என்னை விமர்சிக்கிறார். அமைச்சராக என் செயல்பாடுகளில் மாற்று கருத்து இருப்பின் விமர்சிக்கலாம். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் கிடையாது” என ஆவேசமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments