Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2024 (13:29 IST)

SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT. LTD நிறுவனர் டென்சில் ராயன்,  நிறுவன வெற்றிக்கு உறுதுணையாக இருந்த 20 ஊழியர்களுக்கு கார், பைக் உள்ளிட்டவற்றை வழங்கி கௌரவித்து, அவர்களது திறமையை அங்கீகரித்துள்ளார்.

 

 

சென்னையில் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெடின்  (SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT. LTD)  அசாத்திய வணிக வெற்றிக்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள்தான் முதன்மைக் காரணம் என்பதை அதன் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான திரு டென்சில் ராயன் உறுதியாக நம்புகிறார்.  அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில்  20 ஊழியர்களுக்கு டாடா கார்கள், ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக் உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இது போன்று தங்களது ஊழியர்களை கௌரவிக்கும் மனிதவள கொள்கை கொண்டிருப்பது மிகவும் அரிதானது அதனை டென்சில் ராயனின் சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிகழ்த்திக் காட்டியுள்ளது. 

 

சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ்
 

கப்பல் மற்றும் தளவாடத் துறையில் புதிதாய் நுழைந்து 2 ஆண்டுகளில் பல சாதனைகளை சாத்தியப்படுத்தியிருந்தாலும்,   வேகமாக வளர்ந்து வரும் உலக சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப,  புதுமையான, திறமையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளை வழங்குவதன் மூலம் வணிகங்களையும் நுகர்வோரையும் தொடர்ந்து சிறந்த சேவையின் பக்கம் ஈர்க்க திட்டமிட்டுள்ளது.  இந்நிறுவனம்

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.  

 

இதன் மூலம், தாமதமான ஏற்றுமதிகள், வெளிப்படைத்தன்மையில்லாமை மற்றும் திறமையற்ற விநியோகத் தொடர் உள்ளிட்ட,  தளவாடத் துறையில் உள்ள பொதுவான சவால்களை எதிர்கொள்வதை சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

அனைத்து கப்பல் போக்குவரத்து தளவாட வணிகங்களை எளிதாக்குவதே தங்கள் நோக்கம் என கூறும்,  சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும்,  நிர்வாக இயக்குனருமான  திரு. டென்சில் ராயன்,  பாரம்பரிய கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட செயல்முறைகளில் தோல்வியை ஏற்படுத்தும் காரணிகளை தங்கள் நிறுவனம் புரிந்துகொள்கிறது என்கிறார். மேலும் தங்களது தீர்வுகள் மிகத் திறமையான சுற்றுச்சூழல் உணர்வுகளை உள்ளடக்கியது என்றும், இத்துறையில் ஒரு புதிய தரத்தை கட்டமைக்க தாங்கள் களமிறங்கி இருப்பதாகவும் அவர் கூறினார். 

 

வாடிக்கையாளர்களின் மனநிறைவு என்பது நிறுவனத்தின் முக்கிய மதிப்பு என்று சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உறுதியாக நம்புகிறது.  அதன் மூலம் வணிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வணிகம் பெருகவும் வாய்ப்பு கிடைக்கும்.    

 

சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஏற்கனவே தொழில்துறையில் நேர்மறையான சலனத்தை உருவாக்கி வருகிறது. வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதற்காக வணிக வாகனங்களில் அதிக முதலீடு செய்துள்ளது.

 

குறிப்பாக, வியட்நாமில் கிளை அலுவலகத்தை நிறுவி சர்வதேச சந்தையில்  கால்தடம் பதித்துள்ளது.

 

எண்ட்-டு-எண்ட் சப்ளை செயின் (end-to-end supply chain) மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (logistics) ஆகியவற்றில் வாடிக்கையாளர் தேவைகளை கையாள,  தளவாட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் பிரத்யேக குழுவை  சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கொண்டுள்ளது. மேலும், 

சரக்கு போக்குவரத்தின் மீது மிகச்சிறந்த கட்டுப்பாட்டைக் கை கொள்வதற்கும், நிலையான வாடிக்கையாளர் சேவையை அடைவதற்கும்,  உலகமயமாக்கலில் அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்,  2028 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள் போன்ற பிரதான சர்வதேச சந்தைகளில் தங்கள் இருப்பை நிறுவ ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. 

 

இவை எல்லாவற்றிற்கும் ஆதாரமாக, ஒரு வலுவான மனித வள மேம்பாடு மற்றும் பணியாளர் நலத் திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கமாக சர்மவுன்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கொண்டுள்ளது. இதன் மூலம், நிறுவனம் ஊழியர்களின் ஒட்டுமொத்த நன்மதிப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உற்பத்தித்திறன், ஈடுபாடு மற்றும் தக்கவைப்பு ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது. 

 

 குழு செயல்திறன் மற்றும் கலாச்சாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் தலைமைத்துவ திறன்களை உருவாக்கும் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்க ஊழியர்களை அவர்கள் ஊக்குவிக்கிறார்கள். வாடிக்கையாளர் முன்னுரிமையில் கவனம் செலுத்தும் முடிவுகளை எடுக்கவும், அவ்வப்போது வாடிக்கையாளர் கருத்து அமர்வுகளை நடத்தவும், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் செயல்முறைகளை செம்மைப்படுத்த, அவற்றைப் பயன்படுத்தவும் அவர்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து அதிகாரம் அளிக்கிறார்கள். ஊழியர்கள் ஒரு பணியின் ஒரு பகுதியாக உணரும்போது, அவர்கள் தங்கள் வேலையில் பெருமிதம் கொள்கிறார்கள் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கு பங்களிக்கிறார்கள் என்று அவர்கள் உறுதியாக நம்புவதாக அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

அம்பேத்கர் பெயரை 1000 தடவை சொல்லணும்..! அமித்ஷாவுக்கு எதிராக திருமா எடுக்கும் நூதன போராட்டம்!

வெளிநாட்டில் சட்டவிரோதமாக சிம்களை விற்ற நபர்.. மடக்கி பிடித்த சைபர் க்ரைம் போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments